தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2023 – 2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 4,64,152 லிட்டர் சட்டவிரோத மதுபானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ்நாட்டில் 2023 – 2024 ஆம் ஆண்டில் மதுபானத்தில் இருந்து வருமானம் 45,855.67 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்இது கடந்த ஆண்டைவிட 1,734.54 கோடி ரூபாய் கூடுதலாகும்.
இதற்கிடையில் 2022 – 2023ல் மதுபானம் மூலம் 44,121.13 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க பெற்றுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Comments are closed.