ரஷ்யாவின் புதிய தாக்குதல் திட்டம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

0 4

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் தரப்பு எச்சரித்துள்ளது.

போர்நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சில கருத்துக்களை முன்வைத்தபோது மேற்கண்ட விடயத்தையும் கூட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்து 3 வருடங்களை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலானது இன்னும் நீண்டு வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கமைய 30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன்படி ஜெலன்ஸ்கியும், ரஷிய ஜனாதிபதியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷயா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது என்றும், புடின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.