யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0 7

யாழ்ப்பாணம் (Jaffna) உள்ளிட்ட வடக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் தொடர்பில் பொதுமக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என்று வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வானிலை ஆய்வுத்துறை இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறப்பு அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, வடமத்திய வடமேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய நிலையை அடைந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமானளவு தண்ணீர் குடிக்க வேண்டும் முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.

மேலும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் கவனம் எடுக்கவும் கடும் உடலுழைப்பு சார் வேலைகளை குறைக்கவும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள் என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.