வரி செலுத்துவோர் அடையாள எண்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0 2

இலங்கையில் இன்றுவரை, 6.8 மில்லியன் குடிமக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளன.

இதனால் அவர்கள் அரசாங்க சேவைகளை எளிதாக அணுக முடியும் என்று உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத்தின் தலைவரும் மூத்த ஆணையருமான எம்.ஏ.பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவைகளை அணுகுவதை எளிதாக்குவதற்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் அடையாளக் குறியீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களை கொண்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதத்திற்கு TIN எண்கள்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

TIN எண்கள் வழங்குவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் அதைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறையும் சிக்கலானது என அவர் குறிப்பிட்டார்.

எனவே, TIN எண்கள் பெறுவதன் மதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு TIN எண்கள் பெறுவது என்பது அனைவரும் வரி செலுத்த கடமைப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல என்று உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.