உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் ஜேவிபி கட்சியின் நிலைப்பாடு

0 6

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்புகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சிறிய சலுகைகள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு மேலாக கொள்கை ரீதியான அரசியலை ஊக்குவிப்பதை தமது கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சில்வா ஊடக நிகழ்ச்சி ஒன்றின்போது வலியுறுத்தியுள்ளார்.

குடும்ப அல்லது நட்பு உறவுகளை விட கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

தேர்தல்கள், சிறிய உதவிகளை வழங்குவது அல்லது பிரச்சினைகளைத் தீர்க்க பொலிஸுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது பற்றியதாக இருக்கக்கூடாது.

அதற்கு பதிலாக, போலியான நடவடிக்களை ஊக்குவிக்காத, உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.