அட 80களின் டாப் நாயகி நடிகை ராதாவின் திருமண போட்டோவை பார்த்துள்ளீர்களா… அப்போது எப்படி உள்ளார் பாருங்க

15


மிக இளம் வயதிலேயே சினிமாவில் நுழைந்து தமிழ் சினிமாவின் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதா.

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். நடித்த முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராதா பிஸி நடிகையாக மாறினார்.

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துவந்தவர் கொஞ்சம் கிளாமராகவும் நடித்து வந்தார். நடிக்க ஆரம்பித்த 6 வருடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்தவர் 10 ஆண்டுகளில் 122 படங்கள் நடித்தார்.

கமல்ஹாசன், ரஜினி, விஜயகாந்த், மைக் மோகன், கார்த்தி, பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோ சேர்ந்து நடித்த ராதா சிவாஜி கணேசன் அவர்களுடன் முதல் மரியாதை படத்தில் நடித்தார்.

1991ம் ஆண்டு சாந்தி என் சாந்தி படத்தில் நடித்தவர் ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டவருக்கு கார்த்திகா, துளசி என 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளார்.

அவரது மகள்கள் சில படங்களே நடித்திருந்தனர், அதன்பின் சொந்த தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் நடிகை ராதாவின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதில் நடிகையை பார்த்த ரசிகர்கள் நம்ம ராதாவா இது திருமணம் போது எப்படி உள்ளார் பாருங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Comments are closed.