இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை கொல்லமுன்ன பிரதேசத்தை சேர்ந்த இவர், அயல் வீடொன்றுக்குள் நுழைந்து அந்த வீட்டில் இருந்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்கப்பட்ட நபர் அஷேன் பண்டாரவின் வீட்டை அண்டிய பகுதியில் உள்ள வீதியை மறித்து தனது காரை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஷேன் பண்டார அவரை தாக்கியுள்ளார்.
இந்நிலையில், அஷேன் பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.