இலங்கை தொடர்பான புதிய திட்டங்கள்! ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்

0 1

இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நகர அபிவிருத்தியை திட்டமிடும்போது இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை தயாரிக்குமாறும் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அபிவிருத்தி செயற்பாடுகளின் போது கிராமிய கலாசாரம் மற்றும் மக்கள் வாழ்வியலின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நகரங்கள் மாத்திரமின்றி கிராம அபிவிருத்தியை மையப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.