நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக தற்போது இருந்து வருகிறார். விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் உடன் தொடர்ந்து நடிக்கிறார்.
அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு எப்படி வந்தது என நடிகர் ராதாரவி தற்போது கூறி இருக்கிறார்.
“திரிஷா ஹீரோயின் ஆனது ஒரே இரவில் நடந்த மாற்றம். மும்பையில் இருந்து ஒரு ஹீரோயின், அவர் பெயர் நிலா, நீலிமா எதோ ஒன்று. அவர் லேட் ஆக வந்ததால், அங்கிருக்கும் ஆறேழு பெண்களில் திரிஷா அழகாக இருந்ததால் அவரை ஹீரோயினாக போடும்படி கூறிவிட்டார்கள்.”
“இதுதான் சினிமா. தலையில் எழுதப்படும் விதியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என ராதாரவி கூறி இருக்கிறார்.