2024 ஒக்டோபரில் முடிவடைந்த ஏழு மாதங்களுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய 1.96 பில்லியனை ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
போக்குவரத்து வருமானத்தில் 14.9 சதவீதம் சரிவு ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நிறுவனத்தை தனியார்மயமாக்காமல் மாற்றுத் திட்டங்களை ஆராய்வதாகக் கூறியுள்ளது.
நிதி அழுத்தத்தைக் குறைக்க, அரசாங்கம் குறித்த நிறுவனத்துக்கு நிதிப்பங்களிப்புகளையும் 2024 இல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.