சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்களை ஒரே சீரமைப்பில் காணக்கூடிய ஒரு அரிய வானக் காட்சி தற்போது நடைபெற்று வருவதாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையில் இருந்து இந்தக் காட்சியை மிகவும் தெளிவாகக் காண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களையும் இங்கு ஒரே பொதுவான பாதையில் காணலாம் என்றும் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.