சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளாரா இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா…. வைரலாகும் வீடியோ

16

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் சின்னத்திரையில் நுழைந்து படிப்படியாக முன்னேறி இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி இருந்தது, மக்களாலும் கொண்டாடப்பட்டது.

தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார், படத்திற்காக ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பகட்டத்தில் நடித்த ஒரு குறும்பட வீடியோ தான் வைரலாகி வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா இருவரும் 360 டிகிரி என்ற குறும்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

தற்போது திடீரென இந்த குறும்பட வீடியோ வைரலாக அட ப்ரியா, சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளாரா என ஆச்சரியமாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்குகிறார்கள்.

Comments are closed.