மகிந்த உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை

13

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே குறித்த நடடிவக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அன்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற குற்ற சம்பவங்கள் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.