வாகன இறக்குமதி வரிகளை குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பானது வேறொரு வர்த்தமானி மூலம் திருத்தப்படும் வரையில் மாற்றமடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வரிக் கூறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான எந்த விவாதங்களும் திட்டங்களும் இல்லை என கூறியுள்ளார்.
Comments are closed.