நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

20

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படாது என்று அவர் மேலும் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விடப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Comments are closed.