பாடசாலை மாணவர்களின் 6000 ரூபா கொடுப்பனவு : அமைச்சர் வெளியிட்ட கருத்து

0 4

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், 300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அதேநேரம் ,பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வரவு – செலவு திட்டத்தில் அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு முன்மொழியப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.