இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

16

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதிஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை 1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலும் 31 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் 1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையிலும் 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.