உக்ரைன் – ரஷ்ய போர் முடிவு : புடினுடன் அடுத்தக்கட்டத்தை நோக்கி ட்ரம்ப்

0 6

உக்ரைனில் (Ukraine) போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவது குறித்து ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் அமைப்புகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) அழைத்து பேச்சுவார்த்தை தொடர்பில் தகவல் தெரிவிப்பதன் மூலம் முறைப்படி தொடங்க இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்

புடினும் ட்ரம்பும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் நீண்ட காலமாக தெரிவித்த வருகின்ற நிலையில், இதை எப்படிச் சாதிப்பார் என்பது தொடர்பில் அவர் கருத்து வெளியிடவில்லை.

இந்தநிலையில், ட்ரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

2014 இற்கு முந்தைய உக்ரைனின் எல்லைகளைத் திரும்பப்பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியதை இனி உக்ரைன் சொந்தம் கொண்டாட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்தை அளிப்பது போருக்கான தீர்வாக அமெரிக்க நிர்வாகம் கருதவில்லை என்ற தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.