பண மோசடியில் சிக்கிய ஹரிணி அமரசூரிய : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0 7

அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) பெயரும் இருப்பதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கருத்துக்களை அக்மீமன தயாரத்ன தேரர் (Akmeemana Dayarathana Thero) குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஹரிணி அமரசூரிய, பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நெருக்கடியில் தள்ளுவதற்கும், அந்நிய நாடுகளுக்கு அடிமைப்படுத்துவதற்காகவும் பணம் பெற்றுக் கொண்டதாக ஹரிணி அமரசூரிய தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் ஹரிணி அமரசூரியவின் பெயரும் இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில், யூஎஸ்எயிட் நிதி விவகாரம் தொடர்பில் ஹரிணி அமரசூரிய இதுவரை தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் எதுவித அறிக்கையொன்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.