முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விஜேராம இல்லத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திநாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த இல்லத்தை வழங்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டவர்களுடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்குவதற்கு அரசாங்கம் சட்ட ரீதியாக கடப்பாடுடையது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்சவின் இல்லம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இது சட்ட ரீதியான தீர்மானம் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.