விவாகரத்து ஆன பிறகும் முன்னாள் மனைவியுடன் ஹரித்திக் ரோஷன்.. அப்பா பேட்டி வைரல்

0 2

சினிமா துறையில் பிரபலங்களின் விவாகரத்து என்பது தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் ஒன்று. சமந்தா, தனுஷ், ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி உட்பட இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2000ல் சூசேன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

2014ல் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது ஹிரித்திக் ரோஷன் சபா அசாத் என்ற பெண் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹிரித்திக் ரோஷனின் அப்பா ராகேஷ் ரோஷன் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

விவாகரத்துக்கு பிறகும் சூசேன் கான் இன்னும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக தான் இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார்.

இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் சூசேன் கான் தற்போது அர்ஸ்லான் கோணி என்பவரை தற்போது காதலித்து வருவதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.