உலகில் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் செய்ய முடியாத காரியத்தை தேசிய மக்கள் சக்தி செய்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
ஜனதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியினாலும் இவ்வாறு செய்ய முடியாது
அனைத்து சம்பளங்களும் கட்சியின் நிதியத்தில் வைப்பிலிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மட்டுமன்றி உலகில் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் இவ்வாறு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஒழுக்க விதிகளைக் கொண்ட கட்சியே தேசிய மக்கள் சக்தி என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு என ஒர் கலாசாரம் உள்ளதாகவும் நாம் எம்மை கவனித்துக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வாகனத்திற்கு எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணம் செலுத்துவதும் தமக்கு சுமையாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களே தமக்கு உணவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்சி உதவினால் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வழங்கப்படும் சம்பளத்தை தனியாக எடுத்துக் கொள்வதும், கட்சி நிதியத்தில் வைப்புச் செய்து அங்கிருந்து பெற்றுக்கொள்வதும் வேறு வேறு விதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.