மறைந்த மாவைக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி

0 1

மறைந்த மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) உடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தலைவர் மாவை சேனாதிராசாவின் பூதவூடல் மக்கள் அஞ்சலிக் காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மாவையின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பின்னர் காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுர இன்றையதினம் (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்ததையடுத்து, மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.