தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் 4-5 இல் வகுப்பறையில் படிக்கும் போது பரீட்சை மதிப்பெண்களில் 30% பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்த்திருத்தங்களின் படி, தரம் 1 தொடக்கம் 10 வரையான முன்னோடித் திட்டங்கள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக எதிர்காலத்தில் மாணவர்கள் 21 வயதிற்குள் முதல் பட்டங்களையும், 23 வயதிற்குள் முதுகலைப் பட்டங்களையும், 27 வயதிற்குள் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.