இஸ்ரேல் (Israel) – காசா (Gaza) போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் (Hamas) வசம் பணயக்கைதிகளாகவுள்ள 11 பேரின் பெயர்ப் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
குறித்த பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதோடு இவர்களில் 08 பேர் இன்று (30.01.2025) விடுவிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாவது, இந்த வாரத்தின் இரண்டு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட 11 பேர் விடுவிக்கப்படுவார்கள்.
ஹமாஸ் இதுவரை ஏழு பணயக்கைதிகளை விடுவித்துள்ளது, அதற்கு ஈடாக இஸ்ரேலில் இருந்து 290 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியல் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் உட்பட மொத்தம் 8 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.
காசாவில் போர் நிறுத்தம் ஜனவரி 19ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததால், போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிக்குள் ஏராளமான உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
0000000000
Comments are closed.