நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

25

இலங்கையின் (Srilanka) சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

சில இடங்களில் அதிகூடிய விலைக்கு வாங்குவதற்குத் தேங்காய்கள் இல்லை.

எனவே இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை உப்புத் தொழிற்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் அடங்கிய முதலாவது தொகுதி உப்பு நேற்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த கால ஆட்சியாளர்களே நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு காரணம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் நெல்லினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.