கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தரமான திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சனா.
இவர் 2022ல் வெளியான வதந்தி: The Fable of Velonie வெப் தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
இளம் நடிகையாக வலம் வரும் சஞ்சனா தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளாராம். இப்படத்தில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
முன்னணி இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் சஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கப்போகும் முதல் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.