இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் First லுக் போஸ்டரை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.
காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, தளபதி 69 படத்தின் First லுக் போஸ்டரை படத்தின் டைட்டிலுடன் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.