ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மாத வாடகை சுமார் 500 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டின் மாத வாடகை தொடர்பில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி தனது இல்லத்திற்காக, இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இருந்து மாதத்திற்கு சுமார் 500 இலட்சத்தை செலவிடுவதாகவும் சாகர குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், மக்கள் எதிர்கொள்ளும் அரிசி, தேங்காய் மற்றும் உப்பு பிரச்சினைகளைத் அரசாங்கம் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூனைகளுக்கும், நாய்களுக்கும் உணவளிப்பதால் அரிசி தீர்ந்துவிட்டதாகவும், தேங்காய் சம்பல் தயாரிக்கப்படுவதால் தேங்காய் தீர்ந்துவிட்டதாகவும் சமூகத்தில் பொய்யான கருத்துக்களை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும், அவ்வாறான கதைகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.