அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! மருத்துவ சங்கம் எதிர்க்கும் யோசனை

0 2

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய மதுபான போத்தல்களை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை மேலும் பாதிப்புக்களை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை மருத்துவ சங்க உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,மதுபானத்தின் தரம் தொடர்பில் மதுவரி ஆணையாளர் தெரிவித்த கருத்தை வன்மையாக எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

மதுபானம் உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதொன்று என்பதனை சகலரும் அறிவார்கள்.

இந்நிலையில், குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய மதுபான போத்தல்களை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான புதிய கொள்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுமாயின் கசிப்பு உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கக்கூடும்.

அதேநேரம் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மதுபான பாவனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுகிறது என அநுலா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.