உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி நாளை (25.01.2024) அனுராதபுரத்தில் முதல் பிரசார நடவடிக்கையை மொட்டுக்கட்சி ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரபக்ஷவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முதலில் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயவிற்குச் சென்று அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் ஆசி பெற கட்சி முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கிராமப்புறத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
Comments are closed.