சத்யராஜ் மகன் vs மகள்.. வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா

13

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மேலும் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் சிபிராஜ் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார். தனது ட்விட்டர் bio-வில் ‘கூத்தாடி’ என தன்னைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் சிபிராஜ்.

விஜய் ஒரு கூத்தாடி என சில அரசியல்வாதிகள் மோசமாக பேசி வரும் நிலையில் அதற்காக தான் சிபிராஜ் அப்படி செய்து இருக்கிறார்.

ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா தற்போது திமுக-வில் இணைந்து இருக்கிறார். அதனால் அவர் விஜய்யை நேரடியாக தாக்கி பேசி வருகிறார். விஜய் போட்டோஷூட் அரசியல் செய்கிறார் என சமீபத்தில் அவர் விமர்சித்து இருந்தார்.

ஒரே வீட்டில் அண்ணன் விஜய் கட்சிக்கு ஆதரவு, தங்கை திமுக-வுக்கு ஆதரவு என தற்போது பிரச்சனை வந்திருக்கிறது.

Comments are closed.