ஜனாதிபதியின் சீன விஜயத்தில் புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை! பாட்டலி சம்பிக்க ரணவக்க

0 0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனா விஜயத்தின் போது புதிய முதலீடுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சீனாவிற்கு சென்று புதிய திட்டங்கள் தொடர்பில் எவ்வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநேகமான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டவை எனவும் புதிய முதலீடுகள் என நாட்டுக்குள் எதுவும் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு குறித்து நீண்ட காலமாக சீனாவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்திலும் எந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்திலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் சீனாவுடன் பேசப்பட்டதாகவும் அமைச்சரவையில் இந்த யோசனைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அமைச்சரவைக்கு முன்மொழிந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சீனா விஜயத்தில், புதிய விடயங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை ஹொங்கொங் போன்று தனது மாநிலமாக மாற்றிக்கொள்ள சீனா முயற்சிப்பதாக அன்று கூறிய தலைவர்கள், இன்று சீனாவிற்கு விஜயம் செய்து முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறுவது கவலைக்குரிய விடயம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.