விஜய் சேதுபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது. இதன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் 6 வைல்ட் கார்ட் என்ட்ரி என்று என அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் முத்து குமரன், ரயான், விஷால், பவித்ரா மற்றும் சௌந்தர்யா ஆகிய ஐந்து போட்டியாளர்களும் ஃபைனலுக்கு தேர்வாகினர்.
இதை தொடர்ந்து இடம் பெற்ற டபுள் எலக்ஷனில் ரயானும் பவித்ராவும் எலிமினேட் ஆகி இருந்தார்கள். இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முத்துக்குமரன் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு, நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரன் இருந்ததற்கான சம்பள விபரமும் அவருக்கு மொத்தமாக கிடைத்த பண விபரமும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் படி மொத்தமாக 15 நாட்கள் இருந்ததற்காக அவருக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர டைட்டில் வின்னர் ஆனதால் அவருக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பண பெட்டி டாஸ்க்கில் ஐம்பதாயிரம் எடுத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.