ராம் சரண் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இன்று பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரித்து இருந்தார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதுவே படத்தின் வசூலையும் பாதித்துள்ளது.
இந்த நிலையில், உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 187 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 8 கோடியும் வசூல் செய்துள்ளது.
Comments are closed.