தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் வித்யுத் ஜாம்வல் நடிக்கிறார். சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் சாரப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஷபீர் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்று நடித்து வரும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை எந்த படத்திலும் நடிக்காத மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறாராம். இதற்காக தான் அவர் தாடி வளர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
Comments are closed.