தென் கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது: ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி

0 0

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சாக் யோல், ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக யூன் சாக் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இரண்டு முறை அவரை கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்திருந்தனர். முதல் முயற்சி அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது.

சியோல் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த யூன் சாக் யோல், தான் செய்தது சரியானது என்றும், விசாரணைக்கு தானாக முன்வருவதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாததால், இன்று பெரும் பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தென் கொரிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.