பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்

0 1

தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்ற பெண் ஒருவர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா பொங்கல் சேலையை அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்” என்று கூறியிருந்தார்.

இவரின் பதிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.