பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் ஷரன் ஷர்மா இயக்கத்தில் மிஸ்டர் & மிஸஸ் மஹி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் ராஜேஷ் சர்மா, குமுத் மிஸ்ரா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 31-ம் தேதி வெளியான, இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Comments are closed.