ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் கொண்டாடும் வகையில் ஏகப்பட்ட தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணா, கார்த்திகை தீபம் போன்ற தொடர்கள் எல்லாம் நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாக அதிக பார்வையாளர்களையும் பெற்று வருகிறது.
அதோடு சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
தற்போது ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட ஒரு பிரபலத்திற்கு சீரியலில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 2 ஷோவில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற குருவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த Mizhirandilum தொடரில் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரின் நாயகனாக டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 2 ஷோவில் பங்குபெற்ற குரு தான் நாயகனாக நடிக்க இருக்கிறாராம், அதோடு ஸ்ரீபிரியா நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Comments are closed.