தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் எரிபொருள் வரியை திருத்தாது அதே நிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 2025 ஜனவரி 11ஆம் திகதி முதல் தொடர்புடைய வரிகள் அதே முறையில் பேணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed.