இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டாயிரம் தொன் அரிசி சுங்கப் பரிசோதனைகளுக்காக துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கடந்த டிசம்பர் 04ஆம் திகதி தொடக்கம் அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுமுன்தினம் (10) நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன் ஆகும் என்று இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 66,000 தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.