சிம்பு எனக்கு யார் தெரியுமா? திருமண முடிவில் தவறு.. ஓப்பனாக கூறிய நடிகை

16

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் பத்து தல.

தற்போது, மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை குட்டி பத்மினி சிம்பு குறித்தும் அவரது அம்மா குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” சிம்பு என் சொந்த அக்கா உஷாவின் பையன் தான். இந்த தகவல் பலரும் அறியாத ஒன்று. என் அம்மாவின் சொந்த தங்கச்சியின் பொண்ணு உஷா. என் அம்மாவுக்கு என்னை விட உஷா மற்றும் அவரது மகன் சிம்புவை தான் மிகவும் பிடிக்கும்.

திருமண விஷயத்தில் நான் எடுத்த முடிவுகள் என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த விஷயத்தில் உஷா நல்ல முடிவை தான் எடுத்துள்ளார்.

ராஜேந்திரனை போல சினிமாவில் ஒரு ஜென்டில்மேன் இல்லை என்பது தான் உண்மை. சிம்பு சிறு வயது முதல் டயலாக்கை கொஞ்சம் கூட தவறு இல்லாமல் அழகாக கூறுவார். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருப்பார்” என்று கூறியுள்ளார்.  

Comments are closed.