கஜேந்திரகுமாருக்கு சாணக்கியன் பதிலடி : மீண்டும் குழப்பத்தில் ஒன்றிணைவு முயற்சி

0 1

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், சிறீதரன் (sritharan)மற்றும் செல்வம் அடைக்கலநாதன்(selvam adaikalanathan) ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகளில் நானும் பார்த்திருந்தேன். இது அவர்கள் மூவரும் தனிப்பட்ட ரீதியில் நடத்திய பேச்சாக இருக்கலாம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(shanakiyan) தெரிவித்தார்.

அநுர அரசு கொண்டு வரவுள்ள புதிய அரசமைப்பில் தமிழருக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கஜேந்திரகுமார்(gajendrakumar ) முன்னெடுக்கும் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் எந்தவொரு பேச்சுவார்ததையிலும் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை.

கட்சி சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தால் கட்சியினுடைய அனுமதி இருக்கவேண்டும்.எனவே இது ஒரு பேச்சுவாரத்தையே இல்லை.என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.