முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல (ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று (ஜன. 7) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகரின் தகுதி குறித்து அவர் பதில் அளிப்பார். நாங்கள் காத்திருக்கிறோம். அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தோம்.
அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதன் காரணமாக அவர் டிசம்பர் 13 அன்று சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.