2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

0 3

2025 ஆம் ஆண்டில்  சிறிலங்கா விமானப்படை(sri lanka air force) ஒன்பது புதிய விமானங்களைப் பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து(us) எட்டு பெல் 206 உலங்கு வானூர்திகளும் பாகிஸ்தானில் (pakistan)இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானமும் கிடைக்கவுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கா எட்டு TH-57 சீ ரேஞ்சர் பெல் 206 உலங்கு வானூர்திகளை விமானப்படைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிறிலங்கா விமானப்படையின் விமானத் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திககள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜெட் விமானம் கிடைக்கும் என்றும், விமானப்படை கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானமும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் (australia)இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானமும் கிடைத்தன.

Leave A Reply

Your email address will not be published.