விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும் போது அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் மற்றும் அவரது குழுவினர், புத்தாண்டில் மட்டும் 16 முறை சூரிய உதயங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் போது அவர்கள் சூரிய உதயத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2024 ஆம் ஆண்டு முடியும் போது எக்ஸ்ப்-72 குழுவினர் 16 முறையை சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் விண்வெளி வீரர் பேரிவில்மோருடன் போயிங் ஸ்டார்லிங் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் 9 நாள்களில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் அங்கேயே கொண்டாடினார். இதுபற்றிய காணொளி ஒன்றை அமெரிக்க (United States) விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரிவில்மோர் மார்ச் மாதத்தில் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் பெப்ரவரியில் திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டனர். ஆனால், ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 பணியின் தாமதம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.