ஒருங்கிணைப்பு கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் : சாடும் சிறீதரன்

0 1

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றது தான் ஆனால் இப்போது தான் புதிதாக நடைபெறுவது போல காண்பிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் வினைத்திறனற்றவர்கள் என்பது போல காண்பிக்க முனைவதுடன் அவர்களைப் பிழையானவர்களாக காட்டிக்கொள்வதுடன் அவர்கள் மீது குற்றங்களை சுமத்திக் கொள்ளப்படுகின்றது.

மேலும் இந்தக் கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் தான் அங்கே அதிகம் இடம்பெறுகின்றன. அதாவது வைத்தியர் சத்தியமூர்த்தி (T.Sathiyamoorthy) மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர்.

பொதுவான அபிவிருத்தி தொடர்பான பேச்சுக்கள் அங்கு முன்வைக்கப்படாமல் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியே பேசுகின்றனர்.” என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.