மாவனெல்லை பிரதேசத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லை காகல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய மயானத்திற்கு அருகில் கைது இன்றையதினம் (30.12.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள், சந்தேகநபர்கள் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளுடன் வேனில் கொண்டு வந்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு சந்தேக நபர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 22 வயது, 24 மற்றும் 25 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Comments are closed.