ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0 5

வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கான வரிகளை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதன்படி, வரியற்ற வருமான வரம்பு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், தங்குமிட வரி விகிதங்களை 05 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இதேவேளை, அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.